கடற்படையின் தடைகளை அகற்ற கோரிக்கை!


பொன்னாலைச் சந்தியில் உள்ள இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றவேண்டுமென வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்புக்குக்கு பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக எனக் கூறி வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்போது பொன்னாலைச் சந்தியில் காரைநகருக்குச் செல்லும் வீதியில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

தற்போது, ஆனையிறவு, பூநகரி உட்பட பிரதான வீதிகளில் கூட சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் அகற்றப்பட்ட நிலையில், பொன்னாலைச் சந்தியில் மட்டும் வீதித் தடைகள் அகற்றப்படவில்லை.

இதனால் வாகனங்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன எனவும் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

No comments