கொழும்பில் முடியாததை கேப்பாபுலவில் செய்ய முயற்சியாம்?


கேப்பாபுலவு பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான தனியார் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கேப்பாபுலவில் பேச்சு நடத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் அறிவித்துள்ளார்.அப்பகுதியில் படையினரது ஆக்கிரமிப்பின் கீழ் 72 ஏக்கர் பொதுமக்களது காணி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் அந்த அந்த இடத்தில் தமது வசம் 59.9 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே நேரம் குறித்த நிலத்துக்கு பதில் நிலம் அல்லது நட்டஈட்டுப்பணத்தை பெறுவதற்கு பலர் சம்மதம் தெரிவித்ததாக படையினர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அவ்வாறு படையினருக்கு தம்மால் எவ்வித சம்மதமும் வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்தே கேப்பாப்புலவு நிலம் தொடர்பு கேப்பாப்புலவு முகாமுக்கு முன்பாகவே எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடி இது தொடர்பில் உரிய மக்களுடன் உரையாடி இறுதி தீர்வை எட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் மற்றும் திணைக்களங்கள் வசம் உள்ள நிலங்கள் விடிவிப்பதற்காக எந்த கிராமங்கள் அபகரிப்பில் உள்ளதோ அதே கிராமத்தில் கலந்துரையாடி உடனடியாக தீர்வை எட்டுவது என நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் மற்றும் அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு நிலங்கள் ஆகியவற்றை விடுவிப்பது தொடர்பில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஒரு விசேட சந்திப்பு இடம்பெற்றது இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

அதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலங்குளம் கிராமத்தில் உள்ள 49 ஏக்கர் நிலம் தொடர்பிலும் அதே இடத்தில் மாலை 2 மணிக்கு கூடி ஆராய்ந்து முடிவு கட்டுவது என தீர்தீர்மானிக்கப்பட்டது.

இதே நேரம் வனவள திணைக்களத்தினர் தொடர்ந்தும் மக்களின் நிலங்களை அதிகரிப்பதும் மரங்கள் வளர்ந்த ஒரே காரணத்திற்காக திணைக்களத்திற்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடுவது அதனால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது இதன் பிரகாரம் 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் மட்டுமே திணைக்களம் செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானத்துக்கு திணைக்களமும் தனது சம்மதத்தை தெரிவித்துக் கொண்டது இதேபோன்று மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரிக்கப்பட்டுள்ள கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் நாய் போன்ற பிரதேசங்களில் உள்ள 2 ஆயிரத்து 143 ஏக்கர் நிலம் தொடர்பில் எதிர்வரும் மூன்றாம் திகதி அதே இடத்தில் விசேட கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்கப்படும் எனவும் முடிவு எட்டப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராயா ,சாந்தி சிறிஸ்கந்தராசா ,இ.சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

No comments