தாயை கொன்று பொலிஸாருக்கு ரீல் விட்ட குடும்பம்; அதிரடியாக கண்டறிந்த பாெலிஸார்

நுவரெலிாா - ஹட்டன், வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்கடன் தோட்டத்தின் ரொஸெல்ல பிட்டவின் மேற்பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து தாயின் சடலத்துடன் காணாமல் போனதாக கூறப்பட்ட மகன், பேரன் கைது செய்யப்படுள்ளதுடன், 81 வயதுடைய வல்லியம்மா ராகை என்ற குறித்த தாயின் சடலம் சந்தேக நபர்களின் வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி குறித்த பெண் உயிரிழந்ததாக கூறி குறித்த பெண்ணின் மகனினால் இறுதிக்கிரியை செய்வதற்கு பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் சடலத்தை காட்டிற்குள் வீசூவதாக கூறி சடலத்தை எடுத்துச் சென்றதாக உயிரிழந்த பெண்ணின் மருமகள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் நேற்று (12) உயிரிழந்த பெண்ணின் 8 வயதுடைய பேரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றிருந்தனர். இதன்போது குறித்த சிறுவன் தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்தாகவும் இதன்போது பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பின்னர் தனது பாட்டியை பொதி ஒன்றில் கட்டி தந்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.

குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருமகளை கைது செய்த பொலிஸார் அவரை கொழும்பிற்கு அழைத்து வந்து மறைந்திருந்த கணவனையும் மகனையும் பொலிஸார் நேற்று (12) கைது செய்திருந்தனர். உயிரிழந்த பெண்ணின் மகனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் பின்னாள் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

No comments