செம்மலை விவகாரம் கண்மூடிய கொழும்பு ஊடகங்கள்?


முல்லைத்தீவில் உள்ள புனித செம்மலை நீராவியாடி பிள்ளையர் கோவிலின் வளாகத்திற்குள் ஒரு பௌத்த துறவியின் உடலை தகனம் செய்யும் இழிவான செயல் பற்றி ஒரு கண்டன அறிக்கையை/பத்திரிகை அறிக்கையை கொழும்பை செயற்பாட்டு தளமாக கொண்ட அகில இலங்கை இந்து மன்றம் வெளியிட்டு இருந்தது . அந்த அறிக்கையில் குறிப்பிட்ட முல்லைத்தீவு சம்பவம் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தீவில் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் இன பாகுபாடு, ஓரங்கட்டப்படுதல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை நிரூபிக்கிறது என சுட்டி காட்டி இருந்தது . குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்தி இருந்தது.
ஆனால் அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான லேக் ஹவுஸ் ஆங்கில பத்திரிகையான டெய்லி நியூஸ் Daily News வெளியிட மறுத்துவிட்டது. பணம் செலுத்திய வெளியீடாக கூட அதை வெளியிட மறுத்துவிட்டது.

No comments