புலம்பெயர்ந்தவர்களும் காணிகளை பதியவேண்டுமாம்?


இலங்கைப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.மீள மீள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதன் ஊடாக மக்களை சலிக்க வைக்கும் உத்தி பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.அதிலும் குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள மக்களை அடையாளப்படுத்த இந்த உத்தி பயன்படுவதாக குற்றச்சாட்டுக்கள் மக்களால் எழுப்பப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி இருந்தால் அந்தக் காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களாக இருந்தால் உடன் பதிவுகளை மேற்கொள்ள வோண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணி தொடர்பான கலந்துரையாடலின் போது இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments