இறுகுகின்றது அவன்கார்ட்


அவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கினை தாக்கல்  செய்த முறை தவறானது என தெரிவித்து தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து ,கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவினை ஏற்றுக்கொள்ளுமாறு அசல வெங்கப்புலி மற்றும் அரஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) உத்தரவிட்டுள்ளன

No comments