இலங்கையில் கனிமொழி எம்பி; விசேட பேச்சுவார்த்தை

இலங்கை வந்துள்ள தமிழக எம் பி கனிமொழி, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சியுடன் பேச்சு நடத்தினார்.

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கைது செய்யப்பட்டோரை விடுவிப்பது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

இராஜகிரியவில் உள்ள மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அமீரலி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments