கோத்தாவை கைது செய்ய கோரவில்லையாம் சிஐடி பல்டி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) கோரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்க குடியுரிமை தொடர்பான விசாரணை முன்னேற்றம் குறித்தே நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது என்று சிஐடி தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக 2005ம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக இருந்த கோத்தாபய சுற்றுலா விசாவில் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டமை தொடர்பில் அவரை கைது செய்ய சிஐடி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்தார் என்று தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments