யாழில் சவேந்திரா: வவுனியாவில் எதிர்ப்பு?


இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துள்ளார்.அத்துடன் ஆரியகுளம் நாகவிகாரைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.அத்துடன், நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நல்லை  ஆதினத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி, நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

அவர் இராணுவ தளபதியான பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக விஜயம் செய்திருந்த நிலையில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. 

இதனிடையே யாழில், 92 சதவீதமான பொதுமக்களின் காணிகள்  இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக,  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அத்துடன், எஞ்சியுள்ள 8  சதவீதமான காணிகளில், விமான நிலைய பயன்பாடு தவிர்ந்த ஏனைய  காணிகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் எனவும்,  இராணுவதளபதி  தெரிவித்திருந்தார்.
இதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆளுநர்; இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் அறிவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் இராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டார். 

No comments