அம்பலமானது பொய் பிரச்சாரம்?


மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை நீடித்து வருகின்றமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தேகத்தை தூண்டும் வகையிலான காணொளி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள்  குறித்து பிரசாரம் செய்பவர்கள், சட்டத்திலிருந்து தப்ப முடியாது என மலேசிய பொலிஸ் தலைமை அதிகாரி ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் காணொளியானது, முன்பே பதிவு செய்யப்பட்ட ஒன்று எனவும், பிரச்சினைகளை தோற்றுவிக்க சிலர் மீண்டும் அதனை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காணொளி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகள் முன்பதாகவே முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பொலிஸ் தலைமை அதிகாரி ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

No comments