முகநூல் பதிவுகளுக்கான விரும்பங்களை மறைக்கும் சோதனை


முகநூல் பதிவுகளுக்கான விருப்பங்களை மறைப்பது தொடர்பில் முகநூல் அவதானம் செலுத்தியுள்ளது.

ஒரு பதிவின் அல்லது இடுகையின் எதிர்வினைகள், (Reactions) பார்வைகள் (Views) மற்றும் விருப்பங்களின் (Likes) எண்ணிக்கையை, பதிவாளர் மாத்திரம் காணக்கூடிய வகையிலான பரிசோதனை ரீதியிலான கட்டுப்பாடுகளை பேஸ்புக் விதிக்கவுள்ளது.

இந்த சோதனை அவுஸ்திரேலியாவில் இன்று (27) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வினை மற்றும் காணொளி பார்வைகளின் எண்ணிக்கைகளை தனிப்பட்டதாக்கும், ஒரு வரையறுக்கப்பட்ட சோதனையை ஆரம்பித்துள்ளதாக, முகநூல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் மக்களின் அனுபவங்களை மேம்படுத்துமா?  என்பதைப் அறிந்துகொள்ளும் வகையில் தகவல்களை சேகரிக்ககவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments