கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்?


கிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் சகபாடிகள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்க சி.சிறீதரனின் விசுவாசிகளோ டக்ளஸ் கூப்பிடவில்லையா?சந்திரகுமார் கூப்பிடவில்லையாவென வக்காலத்து வாங்கிவருகின்றனர்.

மறுபுறம் இது பாடசாலைகளில் தேவையில்லாத பல பிரச்சினைகளை உருவாக்கும். பாடசாலைகளை கட்சி அரசியலுக்கான களமாக்கப்போகிறது.

கல்வி முன்னேற்றத்தில் உண்மையான அக்கறையிருந்தால் இந்தச் சந்திப்பை ஒரு பொது இடத்தில் வைத்து நடத்தலாம். அல்லது கல்விப் பணிமனையில் வைத்து உரையாடியிருக்கலாம்.

ஏற்கனவே வடமாகாண கல்வி அமைச்சினை தனது பிரதிநிதியான குருகுலராஜாவிற்கு சி.சிறீதரன் பெற்றுக்கொடுத்திருந்தார்.ஆனால் சி.சிறீதரின் தவறான நிர்வாக தலையீட்டுக்களையடுத்து குற்றச்சாட்டுக்களுடன் தனது பதவியை குருகுலராஜா இழக்கவேண்டியேற்பட்டது.

இந்நிலையில் கல்வி அமைச்சினை தன்வசம் வைத்திருந்த போது ஒரு துரும்பை தானும் தூக்கிப்போடாத சி.சிறீரனின் அதிபர்களிற்கான அழைப்பே விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.

No comments