கறுப்பு வெள்ளைப் பசுவை திருடி நிறம் மாற்றிய பலே திருடன்


திருடப்பட்ட பசு  ஒன்றுக்கு  வர்ணம் தீட்டி அதனை , இறைச்சிக் கடை ஒன்றுக்கு  விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பசுவையும் மொனராகலைப் பொலிஸார் மீட்டனர்.

பொலிஸா ருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்   மொனராகலைப் பகுதியின் பக்கினிகாவெலை என்ற இடத்தில்  உள்ள  இறைச்சிக் கடை ஒன்றிலிருந்தே குறித்த பசுவை பொலிஸார்    மீட்டனர்.

பசுவின் உடம்பு (தோல்) இடைக்கிடையே வெள்ளை நிறத்திலிருந்த போதிலும், அந்த வெள்ளை நிறங்கள் அனைத்தும் கறுப்பு  நிறத்தால் மறைக்கப்படடு விற்பனை செய்யப்பட்டிருப்பதும், தெரியவந்துள்ளது.

பசுவின் உரிமையாளர் மொனராகலைப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டில் தமது பசுவின் பெறுமதி எழுபத்தையாயிரம் ரூபா  என்றும்  குறிப்பிட்டு  இதன் அடையாளங்களையும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பசுவின் உரிமையாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து  அங்கு சென்ற அவர்  பசு உரிமையாளர் தமது பசுவை பசுவின் நெற்றியில் உள்ள  அடையாளத்தை கண்டு அது தனது பசு என்பதனை அறிந்து கொண்டதுடன்   பசுவின் உடம்பு கறுப்பு நிறமாக்ககப்பட்டிருந்ததனையும் அவதானித்து கொண்டு   பொலிஸாருக்கு  அறிவித்தார்.

அதையடுத்து பொலிஸார் அங்கு சென்று பசுவை மீட்டதுடன், பசுவைத் திருடிய சந்தேகத்தில் இளைஞர் ஒருவரையும் கைகது செய்தனர்.

No comments