திருமண வீட்டில் கொள்ளையிட்ட மூவர் கைது.

திருமண விழாவின் காணொளிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்த கும்பலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதியில் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments