இன்று திருமணத்தில் இணையவிருந்த ஜோடி விபத்தில் சிக்கியது


இன்று திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம்  நேற்று இரவு வவுனியா-  குருமன்காடு பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் நேற்று இரவு  மோட்டார் சைக்கிளில் அலுவல் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

இருவரும் குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மணப்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ளதுடன், மணமகனுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் சிறு காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டுள்ளனர்.

No comments