கடும் வெப்பத்தினால் பிரான்சில் 1,500 பேர் பலி!

இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடையின்  கடும் வெப்ப தாக்கத்தின் விளைவாக பிரான்சில் கிட்டத்தட்ட 1,500 பேர் இறந்ததாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் இன்டர் ரேடியோவில் பேசிய ஆக்னஸ் புசின், ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், அவர்களில் பாதி பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் கூறினார்.
 

இந்த கோடையில் பிரான்ஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது, மற்றும் 2003 ஆம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடும் வெப்பத்தினால் 15,000 பேர் வரை இறந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments