ஹிந்தியை எந்த மாநிலத்தவரும் ஏற்கமாட்டார்கள்!

தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது என அரசியலுக்கு வர இருக்கும் நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். 

ஹிந்தியை இந்தியாவின் பொது மொழியாக்க வேண்டும் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா   சியது சர்ச்சையை கிளப்பியது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்தும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த் ’ஹிந்தியை திணிக்க கூடாது. தமிழக மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி கொண்டு வர முடியாது. எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியை திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடமாநிலத்தில் கூட சில ,மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

No comments