காணாமல் போனோருக்கு பிச்சை:அதிகாரிகளிற்கு ஆசைதீர?


காணாமல் ஆக்கபட்;டோர் குடும்பங்களிற்கு மாதம் 6ஆயிரம் இடைக்கால கொடுப்பனவு வழங்க முன்வந்த இலங்கை அரசு மறுபுறம் காணாமல் போனோர் அலுவலக பணியாளர்களிற்கு அள்ளி அள்ளி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம் காணாமல் போனோர் அலுவலகப் பணிப்பாளரிற்கு மாதாந்தம் ஒரு இலட்சமும் ஏனையவர்களிற்கு 75 ஆயிரம் ரூபாவும் மாதாந்த உதவு சம்பளமாக வழங்கப்படுகின்றது.

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு செயல்பட ஆரம்பித்து தற்போது அதற்காக 4 அலுவலகங்களும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்  ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவானது ஆணைக்குழுவின் தலைவருக்கு மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாவும் ஏனையவர்களிற்கு 75 ஆயிரம் ரூபாவும் மாதாந்த உதவு தொகையாக வழங்கப்படுகின்றது. இதேநேரம் தலைவருக்கு மாதாந்தம் தொலைபேசி கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபா வழங்கும் அதேநேரம் ஏனைய உறுப்பினர்களிற்கு 8 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.

இதேபோன்று போக்குவரத்துச் செலவாக தலைவரிற்கு மாதாந்தம் 225 லீற்றர் எரிபொருளும் உறுப்பினர்களிற்கு 350 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பயணமாகின் 25 ஆயிரம் ரூபாவும் அதற்கு மேற்பட்ட கிலோ மீற்றருக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.

இதனிடையே காணாமல் போனோரது குடும்பங்கள் இவ்வலுவலகங்களை எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments