பரபரப்புக்கு மத்தியில் நேருக்கு நேர் மோடியும் இம்ரானும் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேச செப்டம்பர் 21ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி வரும் 27ஆம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார். பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றுவது இதுதான் முதல்முறை" எனத் தெரிவித்தார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி ஐ.நா அமர்வில் பேசவுள்ள பேச்சாளர்களின் பட்டியலின் படி, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதே அமர்வில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி பாகிஸ்தான் கூறியதையடுத்து, இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்து பாகிஸ்தானை கடுமையாக சாடியது. மேலும், ‘எந்தவொரு நாடும் அதன் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஏற்காது. நிச்சயமாக இந்தியா அதற்கு இடம் அளிக்காது’ என இந்தியா கூறியிருந்தது.
தற்போது நிலவி வரும் கால நிலையில், ஐ.நா அமர்வில் மோடியும், இம்ரான் கானும் அடுத்தடுத்து உரையாற்றுவது உலக நாடுகளிடையே முக்கியமானதாக கருதப்படுகிறது.

No comments