தடைகளை தாண்டிய எழுக தமிழ்!


எழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களுடன் மக்களோடு மக்களாக பேரணியில் பங்கெடுத்திருந்தார்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ தனது கட்சியின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் குகதாஸ் தலைமையில் பேரணியில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே மற்றொரு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம் தனது கட்டுப்பாட்டினில் உள்ள யாழ்.வர்த்தக சங்கத்தை போராட்டத்திற்கு ஆதரவளிக்க கூடாதென தடுத்திருந்தார்.

எனினும் குடாநாடு முழுமையாக முடங்க யாழ்.நகர வர்த்தகர்களும் அடித்துப்பிடித்து கடைகளை பூட்டி போராட்டத்தில் இணைந்து கொண்டனர். 
இதேபோன்றே வடக்கு ஆளுநரும் தனது பங்கிற்கு பாடசாலைகள் இயங்குமென அறிவிக்க ஒட்டுமொத்த மாணவ சமூகமும் புறக்கணிப்பில் குதித்திருந்தது.

ஆளுநரது செய்தி கேட்டு வந்திருந்த ஒரு சில மாணவர்களை பாதுகாக்க பாடசாலை ஆசிரியர்கள் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது.

இதேபோன்று மாகாணசபை அலுவலகங்களும் திறக்கப்படுமென அறிவிக்க அங்கும் ஈயோட்ட மட்டுமே முடிந்திருந்தது. 

No comments