காற்றின் வேகம் அதிகரிக்கலாம் - எச்சரிக்கை

தென் மாகாணத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வட மத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments