ஜதேக:யாருடன் யாரென்றே தெரியவில்லையாம்?


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேட்பாளர்கள் அதிகரித்திருப்பதே பிரச்சினைக்கு பிரதான காரணம் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கூறினார்.
இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஒரு இடத்தில் ஒன்று கூடி உணவு பரிமாறிக் கொள்வதற்கு கட்சித் தலைவரின் அனுமதியைக் கோர வேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நடாத்திய கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனா நடைபெற்றது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் பாலித்த எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். 

No comments