திருக்குறளை துணைக்கிழுத்த மோடி!

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டு  நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

அதில் உரையாற்றும் போது நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து பேசும்போது இடையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் பேசிய மோடி “நீரின்றி அமையாது உலகு” என்றார். மேலும், அவர் ”நீருக்கான தேவையைப் பூர்த்தி செய்து, தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்பதே எங்களின் அடுத்த இலக்கு. நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு இருப்பது வருத்தமளிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயம், தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

திருவள்ளுவரை யார் தூக்கிப்பிடிப்பது அவர் யாருக்கனவர் என்ற விவாதங்கள் பஜகவினருக்கும் திராவிட சித்தாந்த வாதிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் வேளையில் அண்மையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சென்னையில் பிரமாண்டமான முறையில் திருக்குறள் மாநாட்டை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments