தனக்கு தானே வெள்ளையடிக்கும் சவேந்திரசில்வா?


தன் மீது முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கவும் சர்வதேச நன்மதிப்பினை பெற்றுக்கொள்ளவும் புதிய இராணுவத்தளபதி மும்முரமாகியுள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பில் கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சர்வதேச இராணுவ அதிகாரிகளை அழைக்கும் இராணுவ பாதுகாப்பு கூட்டம் தொடர்பில் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 29 – 30 ஆம் திகதிகளில் 9 ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் பாதுகாப்பு கருத்தரங்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த பாதுகாப்பு கருத்தரங்கானது, உலக புகழ் பெற்ற பாதுகாப்பு பங்குதாரிகள், பாதுகாப்பு நிபுணர்கள், உலக மூலோபாய வள்ளுநர்கள், புத்திமான்கள் மற்றும் இராணுவ நிபுணர்களின் பங்களிப்புடன் 'பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல்' எனும் தொனிப்பொருளின்  நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு  இரண்டு நாள் நடைப்பெறவிருக்கும் இந்த கருத்தரங்கில்  13 வெளிநாட்டு மற்றும் 14 உள்ளூர் பேச்சாளர்கள் உட்பட 800 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கருத்தரங்கானது  அறிவுசார்ந்த தொடர்புகளின் போக்கு மற்றும் துணை கருப்பொருள்களை உள்ளடக்கியும்  'தற்கால பாதுகாப்பு, மோதல் அல்லது ஒத்துழைப்பு, 'பயங்கரவாதத்தை எதிர்கொள்தல், 'இராணுவ நவீனமயமாக்கல்'

மற்றும் 'தற்கால பாதுகாப்பு நிலைமையின்  இராணுவ தயார்நிலை'  போன்ற விடயங்களை உள்ளடக்கிய கருத்துக்கள்  முன்வைக்கப்படவுள்ளன.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிய நெல்சன் மண்டேலாவின் அமைச்சரவையின் அரசியலமைப்பு விவகார அமைச்சராக செயற்பட்ட ரோல்ப் மேயர் சிறப்புரை  ஆற்றவுள்ளார்.

சிறப்பு அழைப்பாளர்களாக  இந்தியாவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் கே மேத்தா உள்ளிட்டவர்களின்  பங்களிப்புடன், 22 நாடுகளைச்சேர்ந்த 24 பாதுகாப்பு இணைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பிரகாரம் 40 நாடுகளில் இருந்து 82 வெளிநாட்டு பிரதிநிதிகள் இப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள உறுதியளித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், சீனா, கனடா ,மாலைதீவு (பாதுகாப்பு படை பிரதானி) மியன்மார், நேபாளம், நைஜிரியா, ஓமான், பாகிஸ்தான், பிலிபைன்ஸ்,  கட்டார்,  தான்சானியா, ஐக்கிய இராச்சியம் ,வியட்நாம் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளைச் சேரந்த உயர் பாதுகாப்பு அதிகாரிகள்  கலந்து கொள்ள உறுதியளித்துள்ளனர்.

இப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக வௌ;வேறு நான்கு பிரிவின் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்புகளும் அத்துடன் நம்பகத் தன்மையான பாதுகாப்பு முறைகள் தொடர்பான பல விடயங்கள் உள்ளடங்களாக பலவிடயங்கள்  தெளிவுபடுத்தப்படவுள்ளன' என்றார்.

அத்துடன், இராணுவ பயிற்சி பணியகம் மற்றும் பல இராணுவ பணியகங்களின் முழுமையான ஒத்துழைப்பில் அனைத்து முறைகளிலும் காணப்படுகின்ற நாட்டின் பாதுகாப்பு அரசியல் மற்றும் வன்முறை தொடர்பான விடயங்கள் உள்ளிட்டவையும் தெளிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது 'உலகலாவிய தடங்கல்களைக் கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளிலும்,  2017ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கருத்தரங்கானது வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments