போரில் மனித உரிமையை பேணினோம்! கதைவிடும் சவேந்திர

இறுதிப் போரின் போது சர்வதேச சட்ட திட்டங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகளை பேணியிருந்தோம் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்,

போரின்­போது பயங்­க­ர­வா­தி­க­ளின் பிடி­யி­லி­ருந்த மக்­களை படை­யி­னர் மீட்­டெ­டுத்­தமை அவர்­க­ளது மனி­த­நே­யத்­திற்­குச் சான்று.

நாட்டை அது எதிர்­கொள்­ளும் அனைத்து வகை­யான அச்­சு­றுத்­தல்­க­ளில் இருந்­தும் பாது­காப்­பேன். தாய்­நாட்­டின் இறைமை, பிர­தேச ஒரு­மைப்­பாடு மற்­றும் ஒற்­றை­யாட்சி ஆகி­ய­வற்­றினை பாது­காப்­ப­தில் இரா­ணு­வத்­திற்கு இரா­ணு­வ­த­ள­பதி என்ற அடிப்­ப­டையி;ல் உரிய தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வேன். அனைத்து அவ­சி­ய­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மூல­மும் இந்த நாட்­டின் அனைத்து மக்­க­ளின் பாது­காப்­பும் உறுதிப்படுத்­தப்­ப­டும். என்றார்.

இதேவேளை போர் குற்றம் சாட்டப்பட்டவராக காணப்படும் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐநா, ஐஒ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments