தெரிவுக் குழுவில் ஆஜராகிறார் பிரதமர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (06) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. 

பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். 

இன்றை தினம் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சி வழங்க உள்ளார். 

அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க உள்ளார். 

அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களாக கடமையாற்றிய சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியவர்களும் சாட்சி வழங்க உள்ளனர்.

No comments