பார்த்திபனின் ஒத்த செருப்பு சர்வதேச விழாவில்

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் சிங்கப்பூர் சர்வதேச திரைப்படவிழாவுக்கு தேர்வாகியுள்ளது.

ஒத்த செருப்பு படம் சிங்கப்பூர் உலகத் திரைப்பட விழாவிற்கு தேர்வானதை பார்த்திபன் தனது கீச்சு பக்கத்தில் சுவரொட்டி வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

நடிகராக பிரபலமான பின்னரும் தொடர்ந்து படங்களை இயக்குவதோடு சோதனை முயற்சிகளையும் செய்துபார்க்கும் பார்த்திபன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்என்பதும் அதேவேளை தனியா தானே நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய விடையமாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

No comments