தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள்!

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து   ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.

ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.

முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி பிரிகேடியர் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.இன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியாபித்துள்ளது.

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம்.வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.

தனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்

இராணுவத்தில் பெண்கள் – உடற் பலமும் மன பலமும் உள்ள பெண்களால் இராணுவ சேவையில் ஆண்களைப் போல் செயற்பட முடியும் அரசியலிலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை.

பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பது வரலாற்றுச் செய்தி. சுவீடன் நாட்டு உடற் கூறியல் விஞ்ஞானி டாக்டர் லென்னார்ட் லெவி செய்த ஆய்வில் பெண்களின் தாக்குப் பிடிக்கும் வலு பற்றிய திறன் கூறும் தகவல் வெளிவந்துள்ளது அவர் தனது ஆய்வுக்கு 20க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினரான 32 பெண்களையும் அதேயளவு ஆண்களையும் தெரிவு செய்தார்.கப்டன் கோபி நினைவில் மாலதி படையணி

இரு பாலாரும் நல்ல உடற் கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வித் தகமை, வேறுபட்ட நிலமைகளைச் சமாளிக்கும் வலு உள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்து கொண்டார் அவர் ஒரு உடல் உளப் பயிற்சித் திட்டத்தை வகுத்தார் தெரிவு செய்த ஆண் பெண் இரு பாலாரையும் அந்தப் பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தினார்.

மேஐர் சோதியா படையணி

அவர் நடத்திய பரிசோதனை 72 மணி நேரம் நீடித்தது சோதனையின் போது பெண்கள் சொற்ப நேரம் ஓய்வு எடுத்தார்கள் ஆண்கள் அதிக நேரம் ஓய்வு எடுத்ததோடு சோர்ந்தும் காணப்பட்டார்கள் உளவியல் பயிற்சியில் ஆண் பெண் இரு பாலாரும் சமவலுவுடன் காணப்பட்டனர் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் பெண் இராணுவத்தினர் உடலமைப்பு, உடற்பலம், நோய் எதரிப்பு பற்றிய ஆய்வுகள் அமெரிக்க இராணுவ மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் உடலமைப்பு வேறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.ஒரு சராசரி பெண்ணின் உயரம் ஒரு சராசரி ஆணின் உயரத்திலும் பார்க்க குறைவாக இருந்தது பொதுவாகப் பெண் இராணுவத்தினரின் உயரம் அண் இராணுவத்தினரின்உயரத்திலும் பார்க்க குறைவாக இருக்கிறது. பெண்களின் தோளில் இருந்து இடுப்பு வரையான எலும்புகள் ஆண்களின் அதே பகுதி எலும்புகளிலும் பார்க்கப் பலம் குறைந்தவையாகவும் உள்ளன. முதுகு மற்றும் முதுகுத் தண்டு உபாதைகள் பெண்களைக் கூடுதலாகத் தாக்குகின்றன.

ஆண் பெண் இரு பாலாருக்கும் இடுப்புப் பகுதியில் 7 எலும்புகள் மாத்திரம் இருக்கின்றன.

பெண்களுக்கு மாத்திரம் பிரத்தியோகமாக மகப்பேற்று உறுப்புக்கள் உள்ளன. சிசு வெளியேறும் போது இடுப்பு எலும்புகள் விரிந்து கொடுக்கின்றன ஆண்களுக்கு அவற்றிற்கு இடமில்லை களமுனையில் போராடும் பெண்களுக்கு கூடுதலாக எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன சராசரிப் பெண்களின் எலும்புகளின் தன்மை வித்தியாசமானது.

மாத விடாய் நின்ற வயது பெண் போராளிகளின் எலும்பு முறிவு விகிதம் அதிகளவில் உயர்ந்துள்ளது. மன வலிமையைப் பொறுத்தளவில் பெண் இராணுவத்தினர் ஆண்களிலும் கூடிய மனவலுடன் இருக்கின்றனர். இது அவர்களுடைய உடற் குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது. இவ்வாறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.ஆண்களின் இராணுவ அணியில் பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணியில் பெண் இராணுவத்தினர் ஒரு அங்கமாக இடம்பெறுகின்றனர் இது மேற்கு நாடுகளில் இன்று வரை காணப்படும் வழமை ஆண்களின் கட்டமைப்பில் அங்கம் வகித்தவாறு அதியுயர் கட்டளைப் பதவிக்கு உயர்ந்த பெண்களை மேற்கின் முப்படைகளிலும் காணலாம்.

தரைக் கரும்புலிகள் அணி

உளவுப் பணி, இரகசிய சேவை என்பனவற்றில் பெண்கள் தமது அசாத்திய திறமையை நிரூபித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்சு நாட்டு இளம் பெண்கள் எதிரி நாட்டுக்குள் புகுந்து தகவல் திரட்டியுள்ளனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்

ஐர்மன் படைகளுக்கும் ருஷ்யப் படைகளுக்கும் ஸ்ராலின்கிராட் போர்களத்தில் நடந்த சமரில் கல்லூரி மாணவிகள் பங்களிப்புச் செய்து வீர வரலாறாகி உள்ளனர் தாயகத்திற்கு ஆபத்து போரிட வாரீர் என்ற குரல் கேட்டதும் ருஷ்ய மருத்துவக் கல்லூரி மாணவிகள் களத்திற்குச் சென்றனர்.விமான எதிர்ப்பு பீரங்கிகளை இரவு பகல் பாரது இந்த மாணவிகள் இயக்கி உள்ளனர் காயம் பட்ட ஆண்படையினருக்கு இரத்த தானம் செய்வதில் பெண்கள் முன்னணி இடம் வகித்தனர் படுகாயம் அடைந்த ருஷ்யப் படையினரைப் போர் களத்தில் இருந்து காவிக் கொண்டு வரம் பணியிலம் இளம் பெண்கள் ஈடுபட்டனர்.

ஸ்ராலின்கிராட் போர்களத்தில் இறந்தவர்களின் பெயர்ப் பட்டியல் ஸ்ராலின் கிராட் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது சாவடைந்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் தொகையை எட்டுமளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. தமக்கெனத் தனி அணியில் இயங்கும் பெண் போராளிகள் தனித்துவமான பல போரியல் அம்சங்களுடன் திகழும் தனிப் பெண் போரணிகள் இரண்டை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.

சோதியா படையணி, மாலதி படையணி, என்ற பெயர் பெற்ற இரண்டும் வீரச்சாவடைந்த பெண் போராளிகளின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதில் மாலதி என்பார் களத்தில் வீழ்ந்த முதற் பெண் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் தலைமையின்றிச் சுயமாகப் பெண் தலைமையில் இயங்கும் பிறிதோர் படையணியை வேறேங்கேணும் காணமுடியாது.தரைக் கரும்புலிகள் அணி

மாலதி படையணி எண்ணிக்கையில் மிகப் பெரியது சுயமாக இயங்கும் கட்டளைக் கட்டமைப்பை அது கொண்டிருந்தது (Command Structure) இந்தப் படையணிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்கள் படையணியிலும் கூடியது நிதி அறிக்கைப்படி பெண் போராளிகளுக்கான செலவினங்கள் அவர்களுடைய விசேட தேவைகள் கருதி மிகக் கூடுதலானது.

2ம் லெப் மாலதி படையணி

மருத்துவப் பிரிவு, ஆயுதக் களஞ்சியப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, உளவுப் பிரிவு, அரசியல் கல்விப் பிரிவு உள்ளடங்கலான பல கட்டமைப்புப் பிரிவுகளை இரு படையணிகளும் கொண்டிருந்தன. இரு படையணிகளும் இரு பிரிகேடியர்கள் தரப் பெண் அதிகாரிகள் தலைமையில் இயங்கின

நவீன போரியல் கல்விக்கு இப்படையணிகள் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு அடிப்படையாக அமையும்.

No comments