செம்பு தூக்கும் ரஜினி ; ஜனநாயக விரோதம் என்கிறார் சேதுபதி!


காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் உலவிவரும் நிலையில் பொதுவாக தமிழகத்தில் மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்புக்களே அதிகம் இருந்தது ,கவனிக்கக்கூடிய பல பிரபலங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து வருகின்றார்கள். 

இந்நிலையில் நடிகரும் பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பிரச்சனைகளில் கருத்து கூறிவரும் விஜய் சேதுபதியிடம் இந்திய ஊடகம் ஒன்று காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்று கேட்டபோது.

விஜய் சேதுபதி: "நிச்சயமா அது ஜனநாயக விரோதமானது, பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்க தான் தீர்வு காண முடியும். உங்கள் வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம் ஆனால் ஆளுமை செலுத்த முடியாது கூடாது" என கூறியுள்ளார்.

அதேநேரம் அரசியலுக்கு வருகிறேன் என்று உதற விட்டுகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் லிசனிங், லேர்னிங் & லீடிங் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போது
காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததற்காக அமித்ஷா வுக்கு பாராட்டு தெரிவித்து தன்னுடைய பாஜக விசுவாசத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “விஷன் காஷ்மீர் ஆப்ரேஷனுக்காக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பான அவரின் நாடாளுமன்ற உரை மிகவும் சிறப்பாக இருந்தது. யார் இந்த அமித் ஷா என்று மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணரையும் அர்ஜுனரையும் போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு மட்டுமே அது தெரியும்” என்றும் புகழ்ந்தார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந் பாஜகவின் முகமூடிதான் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார் என்றும் பகவத்கீதை படிப்பவர்கள் எப்பவும் அதிகார வர்கத்தின் பக்கமே நிற்ப்பார்கள் என்பது உர்ஜிதமாகின்றது என இணையங்கள் எங்கும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

No comments