சிறிசேனவிற்கு இன்ரர்போல் பதக்கம்; ஏன் தெரியுமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்ரர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸின் பொதுச் செயலாளர் ஜூர்ஜென் ஸ்ரோக்க் விசேட பதக்கம் ஒன்றை வழங்கி கெளரவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை துரிதமாகக் கைது செய்தமை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இன்ரர்போலின் பொதுச்செயலாளர் இன்று (27) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நிபுணத்துவத்துடன் செயற்படுவதாக இதன்போது ஸ்ரோக் தெரிவித்துள்ளார்.

No comments