குளிரூட்டப்பட்ட கூடாரங்கள் அமைத்து தொடங்கியது ஹஜ் புனித யாத்திரை

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியப் புனித நகரங்களில் இன்று 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரையைத் தொடங்குகின்றனர்.
வளைகுடாவில் நிலவும் பதற்றநிலைக்கு இடையே சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை நடைபெறுகிறது.
350,000 குளிர்சாதனங்களைக் கொண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தரகர் இல்லாமல் 1.8 மில்லியனுக்கும் அதிகமான விசா இணையம்மூலம் விநியோகிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்தது.
முஸ்லிம்கள் மேற்கொள்ளவேண்டிய 5 கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. வாழ்நாளில் ஒருமுறையாவது முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் கடமையை  நிறைவேற்ற வேண்டும் என்பது நம்பிக்கை. 

No comments