இரண்டு நிமிடம் தொலைபேசியில் பேச வரிசையில் காத்திருக்கும் காஷ்மீரிகள்!

இந்தியாவின் காஷ்மீர் பகுதி சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைக்காட்சி, தொலைபேசி வலையமைப்புக்கள் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரச அனுமதியின் கணகாணிப்போடு இரண்டு நிமிடம் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அதுவே அவர்களுக்குப் பொன்னான தருணம்.ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு, ஒருவாரமாக தொலைபேசி, இணையத் தொடர்பு இல்லை.ஆகவே, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஏக்கத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.
அங்குள்ள 2 தொலைபேசிகளில் இருந்து அவர்கள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் உள்ள உற்றார் உறவினருக்கு 2 நிமிடங்கள் பேசலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments