குப்பை டிப்பர்கள் மீது தாக்குதல் - மூவர் கைது

கொழும்பில் இருந்து அறுவக்காடு குப்பை சேகரிப்பு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் - மன்னார் பிரதான வீதியில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் கூறினார்.

மூன்று டிப்பர் வண்டிகள் மீதே இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனால் டிப்பர் வண்டிகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments