பயங்கரவாதிகளின் 2ம் நிலை தளபதி மகன் அதிரடிக் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரும் பயங்கரவாதியுமான ஷஹ்ரான் ஹஷிமின் 2ம் நிலைத் தளபதியாக கருதப்படும் நௌபர் மௌலவியின் மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு இன்று (16) அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதானவர் 16 வயதுடைய குருநாகல் - ஹெக்குனுகொல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் நௌபர் அப்துல்லா எனும் அபு ஹசாம் என்பவராவார்.

பயங்கரவாதி ஷஹ்ரானினால் நுவரெலியாவில் நடாத்தி செல்லப்பட்ட இராணுவ பயிற்சியில் இணைந்து கொண்டு ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டிருந்ததாக இவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தற்கொலை தாக்குதலில் இறந்த ஷஹ்ரானிற்கு அடுத்த நிலைத் தலைவராக குறித்த சந்தேக நபரின் தந்தை மௌலவி மொஹமட் நௌபர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments