பஸ் ஏறிய அமைச்சரும் தொண்டரடிப்பொடிகளும்?


யாழ்ப்பாணம் வருவதும் வந்தோமா நாலு புகைப்படம் எடுத்தோமா அதனை முகநூலில் பிரசுரித்தோமா என்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளது தொழிலாகியுள்ளது.ஆனாலும் இப்போது எள்ளோடு சேர்ந்து எலிப்புழுக்கையும் காயும் கதையாகியிருக்கின்றது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களதும் அதன் பிரமுகர்களதும் கதை.

எங்கெல்லாம் இடம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் கடைபரப்பும் அரச சுகாதார அமைச்சருடன் பஸ் ஏறி பயணித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

மோசமான பயணிகள் போக்குவரத்து சேவையுள்ள தீவகத்திற்கு குளிரூட்டப்பட்ட கார்களில் சென்று பயணிகள் பேரூந்தில் ஏறி அவர்கள் போட்ட நாடகத்தினை சாதாரண பொதுமக்கள் மட்டும் துன்பங்களுடன் கடந்து சென்றிருந்தனர்.

No comments