காஷ்மீருக்குள் நுழையும் அமெரிக்கா!-அசோக் தவமணி

அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35A ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தனித்த உரிமையை வழங்குகிறது.

இது காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

ஆர்டிக்கிள் 370, ஜம்மு காஷ்மீர் தனி அரசியலமைப்புச் சட்டம், தனித்த இறையாண்மை கொண்ட தன்னாட்சி பகுதியாக இந்தியா அங்கீகரிக்கிறது.

 ஆர்டிக்கிள் 35A ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கும் அதிகாரத்தை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு (உண்மையில் நாடாளுமன்றம்) வழங்குகிறது.

தற்போது பாஜக அரசு, இந்த பிரிவுகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரிவுகள் நீக்கப்படுமெனில், காஷ்மீர் உடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் முறிக்கப்படும்.

அதாவது, இந்த அரசியலமைப்பு பிரிவுகள் தான் ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் ஒட்ட வைத்துள்ளது. அப்படியென்றால், ஒப்பந்தத்திற்கு முந்தைய நிலைக்கு காஷ்மீர் செல்லும்.

 அதாவது தனி நாடு அந்தஸ்து. அப்படியென்றால், பாஜக அரசு காஷ்மீரை தனி நாடாக மாற்றுகிறதா என்றால், இல்லை. காஷ்மீரை ஆக்கிரமிக்க போகிறது. அதவாது, இந்தியா காஷ்மீரை தனதாக்கப் போகிறது.

மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதியை, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீர், இந்துக்கள் அதிகம் வாழும் ஜம்மு, பௌத்தர்கள் அதிகம் வாழும் லடாக் என்ற 3 மாநிலங்களாக பிரிக்கவும் முடிவெடுத்துள்ளது.

ஆர்டிக்கிள் 35A நீக்கப்படுவதன் மூலம், இந்தியர்கள் அதிகளவில் குடியேற்றப்படுவார்கள். மேலும், அந்நிலப்பரப்பில் உள்ள தாதுவளங்களை கொள்ளையடிக்க ஜம்மு, லடாக் மாநிலங்கள் அம்பானி, அதானியிடம் வழங்கப்படும். காஷ்மீர் சட்டமன்றத்தின் அதிகார வரம்பு காஷ்மீர் எல்லைக்குள் சுருக்கப்படும்.

இது நடைபெறுமானால், காஷ்மீர் பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுக்கும். ஐ.நா. மன்றம் வரை செல்லும். இதையெல்லாம் தெரிந்துகொண்டதால் தான் அமெரிக்கா, காஷ்மீர் பிரச்சனைக்கு நாட்டமை செய்ய முன்வருகிறது.

ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்னையை எந்தப்பக்கம் சாய்க்க வேண்டும் என்ற முடிவை இந்தியாவின் பதிலை பொறுத்தே அமையும். பெரும்பாலும் அமெரிக்காவை இந்தியா பகைத்துக்கொள்ள விரும்பாது.

 அமெரிக்கா உள்ளே நுழைவது உறுதி. காஷ்மீர் பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்படும். இடையில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட, அம்பானிகளும் அதானிகளும் கொள்ளையடிப்பார்கள்.

 அமெரிக்காவிற்கோ, சீனாவை எதிர்கொள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இராணுவத்தளம் கிடைக்கும்.

No comments