தீர்வு தருகின்றாராம் காமினி மகன்!


தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அரச அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முல்லைத் தீவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

'தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, காவல்துறை அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.' என்றும் அரச அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஜக்கிய தேசியக்கட்சி தலைவர்களுள் ஒருவராக காமினி திசநாயக்கவின் மகனே நவீன் திஸாநாயக்க ஆவார்.

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர்கள் பலரும் வடக்கு கிழக்கு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments