சிவரூபனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!


கடந்த ஞாயிற்றுக் கிழமை பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னராசா சிவரூபன் கைது செய்யப்பட்டமையினை கண்டித்தும அவரை விடுதலை செய்யக் கோரியும் பளையில் இன்று (23) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பளை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் பிரதேச செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் பிரதேச செயலக அதிகாரியிம் கையளிக்கப்பட்டது.

No comments