சாகல,ருவானும் விசாரணைக்கு?


கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் பிணையில் விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த மீளாய்வு மனு இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் முன்னதாக கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, சட்டமா அதிபரால் இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்னாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோர் அன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர்.
இதனை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments