ஈழ மைலாய் படுகொலை நினைவேந்தல் இன்று?


ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் மைலாய் படுகொலையாக அடையாளப்படுத்தப்பட்ட வல்வைப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரினால் ஆடி அமாவாசை விரதமன்றுறு இந்த நரபலி வேட்டை ஆடப்பட்டது. இதன் போது 72 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.அத்துடன் அப்பாவி பொதுமக்கள் 8 பேரை கைது செய்து சென்ற இந்திய இராணுவம் அவர்களை விடுவிக்காத நிலையில் , இன்று வரை காணாமல் ஆக்கப்படோர் பட்டியலிலே அவர்கள் உள்ளனர்.

தம்மை அகிம்சாவாதிகளாக காட்டிக் கொள்பவர்கள், இன்று வரை எமது தாயகத்தில் நிறைவேற்றிய படு கொலைக்கு ஒப்புக்கு தன்னும் மன்னிப்புக் கோர முடியாத மனதினையுடைய அகிம்சாவாதிகள் என ஊடகவியலாளர் ஒருவர் நினைவுகூர்ந்தார்.

வல்வைப்படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல், இன்று வல்வெட்டித்துறை நகர மத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் இத்தகைய படுகொலைகளை நினைவு கூர்வதை தவிர்க்க ஆலோசனை வழங்கியுள்ளதால் அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் நிகழ்விற்கு எட்டிப்பார்த்திருக்கவில்லை.

No comments