இந்தியா ஒரு நாடே அல்ல! "United States of India"; பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான  முழக்கத்தை எழுப்பியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை  எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல..,
இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை இணைத்து கூட்டாட்சி தத்துவத்தை  அடிப்படையாக ஏற்று அமைக்கப்பட்ட நாடு. என்றும் இது இந்தியா என்பதை விட United States of India என்பதே சரி”
 என்று யாராலையும் பாராளுமன்றத்தில் பேசமுடியாத  துணிச்சலான உரையினை இன்று ஆற்றியிருப்பது இந்திய அளவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலையில் இடம்பெற்ற வாதத்தில் வைகோ பேசியுள்ளதால் இதற்க்கான எதிர்வினைகளை  நாளை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகின்றது.

No comments