தூதரக உறவுகள் முறிப்பு, காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்ல முடிவு!

அண்டை நாடான இந்தியாவுடன் தூதரக உறவுகளை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளும் உரிமை கோரும் இமாலய பிராந்தியமான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை குறைக்கும் புது டெல்லியின் முடிவை எதிர்கொள்ளும் வகையில் இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில், இராணுவ அதிகாரிகளும், மூத்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு இந்த முடிவை புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

' ' சட்டவிரோத, ஒருதலைப்பட்ச  ' ' என்ற வார்த்தையின் அர்த்தத்திலேயே  இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் பார்க்கிறது என்றும். ஐ. நா. பாதுகாப்பு அவையில் இந்த நடவடிக்கையை கொண்டு வர இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகளின் மற்றைய அம்சங்களையும் பாகிஸ்தான் பரிசீலனை செய்கிறது என்று பாகிஸ்தான்அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments