வாடகைக்கு ஸ்கானர்:வருகை தந்த வேகத்தில் திரும்பியது?


நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர்.


கோவில் திருவிழாவை முன்னிட்டு, இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய, கோவிலுக்கு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இந்நிலையில், பொலிஸாரின் இந்தச் சோதனை நடவடிக்கைகளால் கோவிலுக்குச் செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, வடக்கு ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.இதையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை கோவில் சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன

அவை நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதால், அவற்றை இன்றைய தினம் காலை மீண்டும் எடுத்து சென்றுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழிபடவரும் பக்தர்களை உடல்சோதனைக்குள்ளாக்குவது சர்ச்சைகளை தோற்றுவித்திருந்த நிலையில்  பாதுகாப்பு சோதனைகளுக்காக ஸ்கானர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக  நான்கு புற வீதிகளிலும் ஸ்கானர்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் இதற்கென வாடகையாக சுமார் மூன்று இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக பணிப்பின் பிரகாரம் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து வாடகைக்கு இக்கருவிகள் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments