கோத்தாவிற்கு ஒரு தடையுமில்லை?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டாபய அமெரிக்க பிரஜை என்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது குறித்து சட்ட சிக்கல்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments