நெதர்லாந்திலிருந்து கடன்:சத்தியலிங்கம் சத்தியம்!


வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இலங்கை அரசிற்கு முண்டுகொடுத்து நெதர்லாந்திலிருந்து கொண்டுவந்த நிதி கடனாக பெறப்பட்டது .

என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அதனடிப்படையில் நெதர்லாந்து நாட்டின் நிதிஉதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட 12ஆயிரம் மில்லியன் இலங்கை ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற்றதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

இங்கு இருதயநோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல் கௌரவ பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க, கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன , நெதர்லாந்து நாட்டின் துணை வதிவிடப் பிரதிநிதி மற்றும் கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. 

இந்நிதியினூடாக பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கப் பிரிவும், கிளிநொச்சியில் தாய்சேய் விசேட சிகிச்சை மத்திய நிலையமும், மாங்குளத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான சிகிச்சை பிரிவு மற்றும் உளநலப்பிரிவும் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நெதர்லாந்து அரசிடமிருந்து அன்பளிப்பாக நிதி பெறப்போவதாக இலங்கை அரசிற்கு முண்டுகொடுத்து வெளிநாடுகள் சென்று சத்தியலிங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை அப்போது அம்பலமாகியிருந்தது. தனது அனுமதியின்றி சத்தியலிங்கம் அவ்வாறு செயற்பட்டமையினை முன்னாள் முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் அதனை குழப்பியதாக அப்போது சத்தியலிங்;கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments