சஜித் வேண்டாம்:சரத் பொன்சேகா?


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளையே நிறைவு செய்பவராக காணப்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்டபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய பிரதமர் ஜனாதிபதி வேட்பாளராக வராமல், அதற்குப் பகரமாக களத்தில் இறக்குபவர் நாட்டுக்கு பயனற்ற ஒருவராக இருக்குமாயின் தான் ஒருபோதும் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைத் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து ஒன்றாக இருக்கும் போது, அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். சஜித் பிரேமதாச என்பவர் ஜனாதிபதி கூறும் விடயங்களையே செய்து வருகின்றார் எனவும் பொன்சேகா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 51 நாள் அரசாங்க மாற்றத்தின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு கடன்பட்டுள்ளதாக சஜித் கூறியிருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

No comments