அலரி மாளிகைக்குள் தடாலடி?

அலரி மாளிகை என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட சொத்து அல்லவெனவும், பொது மக்களின் பணத்தில் நடாத்தப்படும் நிறுவனம் எனவும் ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.
ஆனந்த சாகர தேரர் பாதுகாப்புப் பிரிவினரின் அனுமதியின்றி பலவந்தமாக அலரி மாளிகைக்குள் நுழைந்து தமது கடிதமொன்றை பொது மக்கள் தொடர்பு அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு வந்த சம்பவமொன்று இன்று (13) இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு போடவேண்டிய விளையாட்டை தனது வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு கூறுகின்றோம். எமக்கு இதில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாயின் இதனை யாரிடம் கூறுவது எனவும் தேரர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அலரி மாளிகையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் தேரர் அச்சுறுத்தல் விடுத்தார். தேரர் ஒருவர் வந்தால் நடந்து கொள்ளவேண்டிய முறைமை பற்றி தெரிந்து கொள்ளுமாறும், அவ்வாறு தெரியாது போனால் பயிற்சி வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தேரர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையுடன் குறிப்பிட்டார்.  

No comments