தையிட்டியிலும் ஆக்கிரமிப்பு விகாரை

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியாா் ஒருவருடைய காணியை ஆக்கிரமித்து விகாரை ஒன்றை இராணுவத்தினா் பெருமெடுப்பில் கட்டிவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

பூரணமாக விடுவிக்கப்படாத நிலையில் உள்ள தையிட்டி கிராமத்தில் தொடா்ச்சியாக மக்கள் தமது காணிகளை கேட்டுவரும் நிலையில் மக்களுடைய காணியை ஆக்கிரமித்து பௌத்தா்களே வாழாத இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுகின்றது.

இந்நிலையில் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான அனுமதியை பிரதேசசபையிடம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் பிரதேசசபையும் அனுமதியை வழங்கியதா? என மக்கள் சந்தேகம் வெளியிட்டிக்கின்றனா். 

No comments