சிரியா போரில் 370,000க்கும் மேற்பட்ட மக்கள் பலி; ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை!

சிரியாவில் நடைபெற்று வரும் போரில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள்  பயன்படுத்தப்பட்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட நாளுக்குநாள் உயிரிழப்புக்கள் அரங்கேறிக்கொண்டு  இருக்கின்றது. இதுவரைக்கும் 370,000-க்கும் மேற்பட்டவர்கள்  பலியாகியுள்ளதாக ஐநாவின் சிரியா நெருக்கடிக்கான  துணை பிராந்திய மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் மார்க் கட்ட்ஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.


இந்த வருடத்தில் ஏப்பிரல் பிற்பகுதி முதல் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் மட்டும்  சுமார் 720 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் Idlib மாகாணப் பகுதியில் இருந்து 330,000 க்கும் மேற்பட்டவர்கள் போர்ப் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் கூறுகிறது

No comments