காவல்துறை கண்காணிப்பில் நளினி! மகளுடன் சேர்ந்து புன்னகைத்தார்...


நிரந்தரம் இல்லா மகிழ்ச்சியில் மகளுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்து புன்னகைத்த நளினியின் படம் சமுகவளைதலங்கள் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி அனைவரின் மனங்களையும் உருகவைதுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன்  நளினி  தம்பதியினருக்கு சிறையில் பிறந்த குழந்தை ஹரித்ரா லண்டனில் கல்வி கற்றுவந்த நிலையில்

தற்போது திருமணம் நடைபெறவுள்ளதினால், தனது மகள் திருமணத்திற்காக சிறைவிடுப்பு  கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததினால் , இன்று (ஜூலை 25) காலை 9.40 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து நளினி ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியே வந்தார்.

வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் அவர் தங்குகிறார். அங்கிருந்து தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். நளினியுடன் அவரது தயார் பத்மா உட்பட இரண்டு பெண்கள் தங்கவுள்ளனர். நளினிக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்ற கட்டளைகளுடன் ஒவ்வொரு நாளும் நளினியின் செயல்பாடுகள் தொடர்பில் சிறைத்துறைக்கு அறிக்கை சமர்பிக்கவேண்டும் என்று காவல்துறையினருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத சிறை விடுப்பு கேட்டிருந்த வேளையில் வெறும் முப்பது நாட்கள் மட்டுமே அதுவும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தாயும் மகளுக்குமான பந்தம் நகரப்போகிறது.

No comments